60 வயது நடிகருக்கு ஜோடியாக 20 வயது நடிகை.? கிழித்து தொங்கவிட்ட ரசிகர்… தன்னை வம்புக்கு இழுத்த ரசிகருக்கு தரமான பதிலடி கொடுத்த சித்தார்த்

0

தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சித்தார்த், இவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருகிறார் இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பல திறமைகளை நிரூபித்து வருகிறார். மேலும் சித்தார்த் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

தமிழில் சித்தார்த் சமீபத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், அந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதுமட்டுமல்லாமல் வசூலும் கட்டியது. மேலும் சித்தார்த் சமூகவலைதளத்தில் ட்ரெண்டிங்கானா நபர்களில் ஒருவர். அதிலும் சமீப காலமாக அரசியல் பற்றி ஏதாவது பேசி  சர்ச்சைக்கு பெயர் போனவர்.

மேலும் தனக்கு மிரட்டல் வந்ததாக போலீஸில் புகார் அளித்திருந்தார் அதனால் இவருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி போலீசார் உத்தரவிட்டார்கள். ஆனால் அது எனக்குத் தேவையில்லை என மறுத்து விட்டார் சித்தார்த். சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர் தன்னைப் பற்றி சமூக வலைதளத்தில் ஏதாவது கருத்து வந்தால் உடனே அதற்கு பதிலடி கொடுத்து விடுவார்.

narappaa
narappaa

இந்த நிலையில் வயதான ஹீரோக்கள் இளம் நடிகைகளோடு நடிப்பது குறித்து விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் சித்தார்த் பெயரை இழுத்த நெட்டிசன்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் அசுரன் இந்த திரைப்படத்தை தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக்காகி வந்தது. இந்த தெலுங்கில் ரீமேக்காகும் நாரப்பா படத்தை கலைப்புலி தாணு தான் தயாரித்து வருகிறார்.

படத்திற்கு மணிசர்மா இசையமைத்து வருகிறார். மேலும் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி அவர்களும் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது தமிழில் பிளாஷ்பேக் காட்சி இளம் தனுசுக்கு ஜோடியாக நடித்த அம்மு அபிராமி தான் இந்த திரைப்படத்திலும் இளம் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதைப் பார்த்து பல ரசிகர்கள் 20 வயது அம்மு அபிராமிக்கு 60 வயது வெங்கடேஷ் ஜோடியா என பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர் கிண்டல் செய்துள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர் 40 வயது சித்தார்த் அவர்களுக்கு 20 வயது நடிகை ஜோடியாக நடிப்பதில் மட்டும் என்ன லாஜிக் இருக்கிறது என கேட்டுள்ளார். இதைப்பார்த்த சித்தார்த் இந்த ஹீரோ வயசு விவகாரத்தில் நான் எப்படி உனக்கு ஞாபகம் வந்தேன் எனக் கேட்டுள்ளார் மேலும்  சூப்பரா தரித்திரம் எங்க இருந்துடா நீங்க எல்லாம் வரீங்க என கூறியுள்ளார்.

sidharth
sidharth