2 வாழை பழத்தின் விலை ரூ442.50.! பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோ.! கிண்டலடிக்கும் ரசிகர்கள்

0
banana
banana

பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் தான் தங்கிய ஹோட்டலில் இரண்டு வாழைப்பழத்திற்கு பில்லாக 442 ரூபாய் 50 பைசா வசூலிக்கப்பட்டது இதனை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர்.

பிரபல பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் 2013 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார், இவர் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், இந்த நிலையில் இவர் சமீபத்தில் சண்டிகரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார் அங்கே இரண்டு வாழைப்பழங்களை ஆர்டர் செய்துள்ளார்.

இரண்டு வாழைப்பழங்களை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக 442 ரூபாய் 50 பைசா வசூலித்து சென்றுள்ளார்கள் இதனை நடிகர் ராகுல் வீடியோ ஒன்றை எடுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் 20 ரூபாய் கூட தேறாத  இந்த வாழைப்பழத்திற்கு எவ்வளவு தொகையா என கிண்டல் அடித்து வருகிறார்கள் ரசிகர்கள் மேலும் சிலர் ராகுல் போஸ் என்று தங்கள் வாழ்க்கையில் அதிக தொகை செலவிட்டதை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வீடியோவை பார்த்த சண்டிகர் ஆணையர் இதனை விசாரிக்க உத்தரவு விட்டுள்ளார்கள்.