1980-ல் ஒரு தலை ராகம் திரைப்படத்தில் வில்லனாக நடித்த ரவீந்தர் என்ன ஆனார்..! அவரின் கதி என்ன தெரியுமா..?

1980ஆம் ஆண்டு இ எம் இப்ராஹிம் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் ஒரு தலை ராகம் இந்த திரைப்படத்தில் உஷா ராஜேந்தர், ரூபா தேவி, சங்கர் பணிக்கர் ரவீந்தர், தியாகு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது. இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்தாலும் இப்ராஹிம் தான்.

அந்தக் காலகட்டத்தில் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அதேபோல் படத்திற்கு இசை அமைத்த இருந்தவர் டி ராஜேந்தர், இன்னுமும் ஒரு தலை ராகம் பாடலை ரசிகர்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள், இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்த ரவீந்தர் என்ன ஆனார் என்பது தற்பொழுது தெரிய வந்துள்ளது.

ரவீந்தரின் பாடி லாங்குவேஜ் டயலாக் மாடுலேஷன் என தனது வித்தியாசமான பேச்சால் பல ரசிகர்களை கவர்ந்தவர் ஒரு காலகட்டத்தில் தமிழ் திரையில் ரவீந்தர் சகாப்தம் துவங்கியது, ரஜினி, கமல்ஹாசன் சூப்பர் ஹீரோக்கள் படங்களில் இவர் தான் வில்லன், அதேபோல் நடனம் ஆடுவதில் வல்லவர் பத்து வருடங்களாக பட்டையை கிளப்பியுள்ளார்.

raveendar

ராம் லட்சுமண் படத்தில் கமலுடன் ரவிந்தரும் டபுள்  ஹீரோக்கள். அப்பொழுது கமல் வரிசையாக ரவீந்தருக்கு பட வாய்ப்பை கொடுத்தார், காக்கி சட்டை திரைப்படத்தில் ரவீந்தர் கமலை ஒரு மிரட்டு மிரட்டுவார் அந்தளவு இவரின் நடிப்பு மிரட்டலாக இருந்தது. ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்தார்,  அதேபோல் எச்சில் இரவுகள் என்ற படம் இவருக்கு இந்திய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது அதன் பிறகு திடீரென காணாமல் போனார்.

raveendar

எங்கே போனார் இவர் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை இடையில் இவரைப் பற்றிய சில வதந்திகள் தான் பரவியது அதன்பிறகு பல வருடங்கள் தலைமறைவாக இருந்த ரவீந்தரை சத்யராஜ் நடித்த 6.1 படத்தில் நடிக்க வைத்தார் ஆனந்த் என்ற தயாரிப்பாளர். அந்த திரைப்படத்தில் ரவீந்தரை பார்த்த பல ரசிகர்கள் அவரின் ஸ்டைல் அவரின் இளமை எதுவுமே மாறவில்லை என கூறினார்கள் அதுமட்டுமில்லாமல் இவருக்கு வயசு ஆகாதா எனவும் கூறினார்கள்.

அதன்பிறகு இவர் மீண்டும் எஸ்கேப் ஆனார் பின்பு கேரளாவில் ரவீந்தர்  பெரிய பிசினஸ்மேன் என்ற செய்தி மட்டும் வெளியாகியது குடும்பம் தொழில் என கேரளாவில் அமைதியாக வாழ்கிறார் ஒருதலைராகம் வில்லன் நடிகர்.

raveendar

Leave a Comment

Exit mobile version