இளம் வயதிலேயே அதிக பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி செட்டி இவருக்கு வயது தற்போது 18 தான் ஆகிறது இவர் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில் சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் மீனவர் சம்பந்தப்பட்ட திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக போய்க்கொண்டிருக்க நடிகை கீர்த்தி ஷெட்டி.
தெலுங்கில் நடித்த திவாரி திரைப்படம் வெகு விரைவிலே திரையரங்கில் வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக இந்த படத்தில் இருந்து தி புல்லட் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் இளம் நடிகை கீர்த்தி செட்டி தொடர்ந்து பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதில் கொடுத்து வருகிறார் அந்த வகையில் அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகை கீர்த்தி ஷெட்டி நிருபர் ஒருவர் உங்களுக்கு யார் மீது கிரஷ் என கேட்டுள்ளார் அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காத நடிகை கீர்த்தி ஷெட்டி.
எனக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் மீதுதான் கிரஷ் என கூறியுள்ளார். இதை அறிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நிச்சயம் நீங்கள் அவருடன் படமும் சேர்ந்து பண்ணுவீர்கள் என கூறி வருகின்றனர் அவருக்கு வாழ்த்துக்களையும் கமெண்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.