16 லட்சம் பணம், 97 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கும் சேர்த்து பூர்ணிமா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா .? இரண்டாவது இடம் உனக்கு தான்

Bigg Boss 7 :  மீடியா உலகில் எந்த பக்கம் திரும்பினாலும் பிக்பாஸ் பற்றிய பேச்சு தான் அதிகம் எழுந்துள்ளன. காரணம் விஜய் டிவியில் பிக்பாஸ் 7 இறுதிக்கட்டத்தை நெருங்கி விறுவிறுப்பாக போய்கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் அதிக போட்டியாளர்கள் மொத்தம் 25 பேர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு வார எவிக்ஷனிலும் ஒருவர் வெளியேற தற்பொழுது இறுதியாக மணிச்சந்திரா, விஷ்ணு, மாயா, அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், விஜய் வர்மா போன்றவர்கள் இருக்கின்றனர்.. இதில் அர்ச்சனா தான் டைட்டில் வின் பண்ண அதிக வாய்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் கணிக்கப்பட்டு வருகின்றன..

விடாமுயற்சி படத்தில் த்ரிஷா கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா.? ரொம்ப சென்டிமென்ட்டா இருக்கே..

இந்நிலையில் கடந்த எபிசோடுகளில் பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டது அதில் முதலில் ஆரம்ப தொகையாக ஒரு லட்சம் வைக்கப்பட்டு பிறகு மூன்று லட்சம் ஐந்து லட்சம் என பணத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது ஆனால் பணப்பெட்டியை யாரும் எடுக்கிற மாதிரி தெரியவில்லை..  அதனால் பணத்தின் மதிப்பை அதிரடியாக உயர்த்தி 16 லட்சம் வைக்கப்படும்போது பூர்ணிமா நான் இந்த பணத்தை எடுத்துட்டு வெளியே போலாம்னு முடிவு எடுத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

அதற்கு சக போட்டியாளர்களும் வரவேற்பு கொடுத்த நிலையில் ஜாலியாக டான்ஸ் ஆடிவிட்டு 16 லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு அண்மையில் வெளியேறினார்.. வெளியே வந்தும் அவரது குடும்பத்தில் இருந்து பூர்ணிமாவிற்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர்.

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அர்ச்சனாவை விட அதிகம் வாங்கும் நபர்

அப்பொழுது தெருவில் பூர்ணிமா நடனமாடிய வீடியோ கூட சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின இன்னிலையில் பணப்பெட்டியில் வைக்கப்பட்ட 16 லட்சத்துடன் அவர் பிக் பாஸ் வீட்டில் பயணித்த 97 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 15000  சம்பளம் என மொத்தம் 14 லட்சம் பெற்றுக் கொண்டார் ஆக மொத்தம் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பூர்ணிமாவே இருக்கு 30 லட்சம் பணம் கிடைத்திருக்கிறது..

Exit mobile version