150 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட வீட்டை கட்டும் தனுஷ்.? புலம்பி தள்ளும் நெட்டிசன்கள்.!

dhanush
dhanush

நடிகை தனுஷ் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம், மாறன் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்தபடி வரவேற்பை பெறவில்லை. இதனால் அடுத்து சிறப்பான படங்களை கொடுக்க வேண்டும் என சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்து வந்தார்.

மறுபக்கம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பல வருடங்களாக திருமண வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதை சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு ரசிகர்கள் வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இதனாலும் தனுஷின் சினிமா வாழ்க்கை சற்று சரிவை சந்தித்தது.

இந்த நிலையில் தனுஷ் ஜவகர் மித்ரனுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், ராசி கண்ணா, பிரகாஷ் ராஜ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. இந்த படம் தனுஷுக்கு கை கொடுக்குமா என்பது இனி தான் தெரியவரும்.

தனுஷ் படத்தை நீண்ட வருடங்களுக்கு பிறகு திரையரங்கில் பார்ப்பதால் தனுஷ் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். ஆனால் அனைவரது மத்தியிலும் இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் சேர்ந்து போயஸ் கார்டனில் வீடு கட்ட பூஜை போட்டிருந்தார்.

dhanush
dhanush

அப்போது சில காரணங்களால் அது நடைபெறாமல் இருந்த நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு அந்த வீட்டை இப்பொழுது கட்ட ஆரம்பித்துள்ளார் தனுஷ். அந்த வீட்டை தனுஷ் 15 கோடி செலவில் கட்டி வருகிறாராம் இதை அறிந்த பலரும் எவ்வளவுதான் செலவு பண்ணி இனி வீடு கட்டினாலும் தனி மரமாக தான் வாழ்ந்து வர வேண்டும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.