15 வருடமா விஜய்க்கும், எனக்கும் பகை.. முதலில் அம்மா, அப்பாவிடம் சமரசமாகட்டும் கொந்தளித்த பிரபல நடிகர்.?

0
vijay
vijay

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு பிறகு அதிக ஹிட் படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட் கதையாக இருந்ததால் ரசிகர்களை தாண்டி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக 200 கோடிக்கு மேல் அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது.

அண்மையில் கூட தளபதி விஜய், வம்சி, படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ போன்றவர்கள் வாரிசு படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தளபதி 67 ஆவது திரைப்படத்தில் விஜய் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

விஜயின் நடிப்பு மற்றும் அவரது அமைதியான குணம் போன்றவை மக்களும் ரொம்ப பிடித்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு நடிகர் மட்டும் நானும் விஜய்யும் சேர்ந்து 15 வருடங்களாக நடிக்கவில்லை எனக்கும் அவருக்கும் சிறு மனஸ்தாபம் இருப்பதாக கூறியுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

நடிகர் நெப்போலியனிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்தார் அப்பொழுது நீங்கள் விஜய் உடன் மீண்டும் இணைந்து படம் நடிப்பீர்களா என கேட்டுள்ளனர் அதற்கு அவர் பதில் சொன்னது.. எனக்கும் விஜய்க்கும் போக்கிரி படத்தில் சண்டை ஏற்பட்டது. அதன் பிறகு 15 வருடங்களாக நாங்கள் பேசிக் கொள்ளவில்லை.

விஜய் உடன் ஏற்பட்ட பிரச்சினையை மறந்து நடிக்க ரெடி.. அதற்கு அவரும் ரெடியாக இருப்பாரா.? விஜய் தனது அம்மா அப்பாவிடம் பேசவில்லை என்பது அமெரிக்கா வரையும் செய்தி வந்துள்ளது இது முற்றிலும் உண்மையா பொய்யா என தெரியவில்லை முதலில் விஜய் அவரது அம்மா அப்பாவிடம் சமரசமாகட்டும் எனக் கூறியுள்ளார்.