15 கோடி வீரரை வெறும் 1.5 கோடிக்கு தட்டி தூக்கிய சிஎஸ்கே அணி..! அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் கொச்சியில் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல அட்டகாசமான முடிவுகளை எடுத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி பிராவோ வுக்கு மாற்று வீரராக ஷாம் கரணை நிச்சயம் எடுப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் அவரை தவற விட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா வீரரான கேமரூம் கிரீனையும் தவறவிட்டு சிஎஸ்கே அணி பெரும் தவறு செய்து விட்டதாக ரசிகர்களை என்ன வைத்து விட்டார்கள். ஆனாலும் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை சிஎஸ்கே அணி கொடுத்தது. அதிக அனுபவம் வாய்ந்த வீரரான பென் ஸ்டோக்கை சிஎஸ்கே அணி தட்டி தூக்கி சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

இந்த நிலையில் சிஎஸ்கே டாப் ஆர்டரில் ஒரு அனுபவம் மிகுந்த வீரர் தேவை என்பதை புரிந்து கொண்டு மணிஷ் பாண்டே மயங்க அவகார்வால் யாராவது ஒருவர் இருப்பார் என எதிர்பார்த்த சூழ்நிலையில் அஜிங்கயா ரஹானாவை  உள்ளே இழுத்துக் கொண்டு வந்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர் அதுமட்டுமில்லாமல் சாஹிக் ரக்ஷித்,  ஹரி நிஷாந்த் என யூ 19  வீரர்களை தட்டி தூக்கி உள்ளார்.

மேலும் சிஎஸ்கே அணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் கெயில் ஜெமினினை வாங்கியதுதான் மிகப்பெரிய மகிழ்ச்சி கடந்த ஆண்டு 15 கோடிக்கு ஆர்சிபி அணி வாங்கிய அந்த வீரரை தற்பொழுது வெறும் ஒன்றரை கோடிக்கு சிஎஸ்கே அணி தட்டி தூக்கி உள்ளது. மிகக் குறைந்த விலைக்காக அவர் கிடைத்தார் என வாங்காமல் ஒரு காரணத்துடன் தான் அவரை உள்ளே கொண்டு வந்துள்ளது சிஎஸ்கே அணி.

csk
csk

2022 ஆம் ஆண்டில் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் தவறவிட்டு இரண்டாவது அணி சிஎஸ்கே தான்  எனவே தீபக் சகார், ட்வைன், பிரிட்டோரியஸ், முகேஷ் சவுத்ரி  ஆகியோர்களுடன் சேர்ந்து டெத் ஓவர்களை வீசக்கூடிய ஒரு தரமான வேகப்பந்து பேச்சாளர் இவர் தான் என கெயில் ஜே மிசன்   என்பவரை லட்டு போல் தூக்கி உள்ளார்கள். இவரின் உயரம் 6.8 அடி ஆகும் அதனால் இந்திய கலங்களில் இவ்வளவு உயரம் கொண்ட வீரர் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் வீசும் பந்து 135 கிலோமீட்டர் வேகம் இருந்தாலும் பவுன்சர்களில் பெரிய அச்சுறுத்தல் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் இவரை கடைசி ஓவர்களில் பயன்படுத்தி டீமுக்கு பக்கபலம் சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

csk
csk

Leave a Comment