144 தடையை மீறி வெளியே வந்த பிரபல நடிகைக்கு நடந்த சோகம்.!!

sharmila mandre
sharmila mandre

சினிமா துறையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சர்மிளா மாண்ட்ரே. இவர் 2007 ஆம் ஆண்டு சஜ்னி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் கன்னடம், தெலுங்கு என பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் வினய், சந்தானம் நடித்து 2012ஆம் ஆண்டு வெளிவந்த மிரட்டல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தற்பொழுது அவர் பிற மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஷர்மிளா மாண்ட்ரே தனது நண்பர்களுடன் சொகுசு காரில் ஊர் சுற்றி வந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக பாலத்தின் உள்ள தூணின் மீது மோதி விபத்துக்கு உள்ளனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

pics
pics