இயக்குனர் சிறுத்தை சிவா சமீபகாலமாக ஹிட் படங்களை கொடுத்து வருவதால் அவரது வளர்ச்சி தமிழ் சினிமாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட ரஜினியை வைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தை எடுத்திருந்தால் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு கோலாகலமாக வெளியானது. இந்த திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாஸ் காட்டி வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா பல்வேறு டாப் நடிகர்களுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் கசிந்து கொண்டே இருந்தன. ஆனால் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் சிறுத்தை சிவா மீண்டும் ஒரு டாப் நடிகருடன் கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்த பிரபல நடிகர் வேறு யாருமல்ல அஜித் என கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித்தை வைத்து சிறுத்தை சிவா தொடர்ந்து நான்கு படங்களை இயக்கிய நிலையில் அடுத்ததாக இவரே இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அ தை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் தலைப்பு கூட கிட்டத்தட்ட கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்களை இயக்கி உள்ளார்.
அந்த வகையில் வீரம், வேதாளம், விஸ்வாசம், விவேகம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஐந்தாவது திரைப்படமாக அஜித்தை வைத்து வரம் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது கூறப்படவில்லை. அதனால் வெகு விரைவிலேயே இந்த அறிவிப்பு வந்தாலும் வரும் என தெரிய வருகிறது.
இது இப்படி இருக்க மறுபக்கம் வாடிவாசல் திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா சிறுத்தை சிவாவுடன் இணைவார் என சமீபத்திய தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. போதாத குறைக்கு தளபதி விஜயுடன் தற்போது சிறுத்தை சிவா பழகுவதால் அவருடன் படம் பண்ண இருப்பதாக பேசுகின்றனர். ஆனால் எது எப்படியோ மீண்டும் ஒருமுறை அஜித்துடன் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.