குறைந்த விலைக்கு விற்கப்பட்ட ரஜினியின் அண்ணாத்த படம்.? ஷாக்கிங் தகவல் இதோ.

தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 40 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் நடித்து வருவதால் ரசிகர்கள், மக்களும் இவரது திரைப்படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். ரஜினி தற்போது சிறுத்தை சிவாவுடன் முதல்முறையாக கைகோர்த்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் ஒரு கிராமத்து கதை களத்தை கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மீனா, குஷ்பு, யோகிபாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் இந்த திரைப்படம் தீபாவளியை குறி வைத்து வெளியாக ரெடியாக இருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பாக படத்திலிருந்து சில சில அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்து வருகிறது அந்த வகையில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.

தொடர்ந்து இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அண்ணாத்த அண்ணாத்த பாடல் மற்றும் சாரா காற்றே ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வருகின்ற அக்டோபர் 14-ஆம் தேதி அனைவரும் எதிர்பார்த்த அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் தெலுங்கு திரையரங்க ரைட்ஸ் உரிமம் மிகப்பெரிய விலைக்கு போய் உள்ளது.  அதன்படி அண்ணாத்த படம் 14 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல். ஆனால் முந்தைய படங்களை விட கம்மியான விலைக்கே விலை போனதாம். சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் திரைப்படம் கூட அதிக விலைக்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment