வலிமை, அண்ணாத்த, பீஸ்ட் படத்தின் ரீலிஸ் தேதி இதுதான்.? கொண்டாட்டும் ரசிகர்கள்.

0

சினிமாவில் ஒரு சில நடிகர்களின் படங்களை மட்டும் திருவிழா போல கொண்டாட காத்து கிடப்பார்கள். அந்த வகையில் ரஜினி, விஜய், அஜித் போன்ற ஜாம்பவான்கள் படம் என்றால் படத்தின் ஷூட்டிங் தொடங்கியதிலிருந்து படம் வெளிவரும் வரை அதைப் பற்றிப் பேசுவதோடு மட்டுமல்லாமல் கொண்டாடவும் செய்வார்கள்.

சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் படங்கள் பெரும்பாலும் வெளி வராமல் இருந்து வந்தன அதற்கு முக்கிய காரணம் கொரோனா தாக்கம் என கூறப்பட்டது தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் முன்னணி நட்சத்திரங்கள் ஓடிடி யை விரும்பாமல் தியேட்டரிலேயே படத்தை வெளியிட காத்திருந்தனர்.

அந்த வகையில் வருகின்ற பண்டிகை நாட்களை எதிர்நோக்கி டாப் நடிகர்கள் காத்திருக்கின்றனர்.  ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளிவர இருக்கிறது அஜித்தின் வலிமை, தளபதியின் பீஸ்ட் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத திரைப்படம் வருகின்ற தீபாவளியை குறி வைத்துள்ளது.

அதனால் படக்குழு தற்போது வெகுவிரைவிலேயே அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிடுகின்றனர். ரஜினிகாந்தை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படமும் கிறிஸ்மஸ் நோக்கி இருக்கிறது இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என ஒத்தகாலில் இருக்கிறதே வலிமை இதற்கு முன்பாக நாளை வலிமை படத்தின் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு நட்சத்திரங்களை தொடர்ந்து வசூல் வேட்டை கொடுத்துவரும் தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் விருவிருப்பாக எடுக்கப்பட்டு வருகிறது பீஸ்ட் வருகின்ற 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. அடுத்தடுத்து ரசிகர்கள் தியேட்டரில் திருவிழா கொண்டாட ரெடியாக இருக்கின்றனர் என கூறப்படுகிறது.