லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படத்தில் முதலில் விஜய்சேதுபதி தான் நடிக்க இருந்தாராம்.? அவரே பேட்டியில் சொன்னது.

vijaysethupathy
vijaysethupathy

தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் பின்னி பெடல் எடுத்து வரும் விஜய் சேதுபதி தற்போது தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளதோடு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன இதனால் விஜய் சேதுபதி தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி ஓடிக் கொண்டிருக்கிறார்.

விஜய்சேதுபதியின் அசாதாரணமான நடிப்பு தற்போது பலரையும் கவர்ந்து இழுத்து உள்ளதால் தற்போது தமிழை தாண்டியும் மற்ற மொழிகளிலும் விஜய் சேதுபதியை தடுக்கி வருகின்றனர் இதனால் ஓடிக்கொண்டே இருக்கிறார். தற்போது பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தாலும் ஒரு சில ஹிட் படங்களையும் அவர் தவிர விட்டுள்ளார்.

சமீபத்தில்கூட பேட்டி ஒன்றில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன அப்போது அடுத்தடுத்த படங்களில் நீங்கள் கமிட்டாகி ஒப்புக் கொள்கிறார்கள் ஆனால் ஒருசில படத்தை தவற விட்டீர்களா என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி நான் எக்கச்சக்கமான படங்களை தவற விட்டு உள்ளேன் ஆனால் ஒரு சில படங்களுக்காக நான் வருத்தப்பட்டும் இருக்கிறேன்.

வருத்தப்படாமலும் இருந்திருக்கிறேன் அந்த வகையில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்திற்கு முதலில் என்னைத்தான் கேட்டார்கள் அப்பொழுது ஒப்புக்கொள்ள முடியவில்லை அதற்கு கொஞ்சம் வருத்தப்பட்டேன் ஆனாலும் ஹரிஷ் கல்யாண் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அதுபோல கைதி படத்திலும் தனக்கு முதல் வாய்ப்பு வந்தது அப்போது சரியான சூழல் இல்லாததால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை அதற்கு பிறகுதான் லோகேஷ் கனகராஜ் கார்த்தியை அணுகினார்.

கைதி படத்தின் கதைக்கு ஏற்றவாறு சரியாக பொருத்தி கார்த்தி என்னை விட நல்ல மாஸ் ஓபனிங் கொடுத்தார். ஒரு சிறந்த படத்திற்கு ஒரு சிறந்த நடிகர் நடித்ததற்காக நான் எப்பொழுதும் கவலைப்பட மாட்டேன் அதுபோல இந்த படத்திற்கு நான் வருத்தப்படவில்லை என கூறினார்.