மோடிக்கு ஆலோசனை கடிதம் எழுதிய 10ஆம் வகுப்பு மாணவன்.!!

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அதே நேரத்தில் தினக் கூலிகள், வீடுன்றி ரோட்டோரத்தில் வசிப்பவர்கள் உணவில்லாமல் பசியுடன் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தெக்ரதுனை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் அபினவ் சர்மா. இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆலோசனை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ஏழைகளை காப்பாற்ற பணம் எப்படி பெறுவது என்பது குறித்து எழுதியுள்ளார்.

அபினவ் சர்மா எழுதிய கடிதத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மத அறக்கட்டளைகளும் அதன் 80 சதவீத செல்வத்தை பங்களிக்குமாறு பிரதமர்கேட்க வேண்டும் இது அனைத்துப் பிரிவினர்களுக்கும் பொருந்தும். மேலும் எல்லா மதங்களின் கடவுளும் பிள்ளைகள் பெரிய அளவில் காப்பாற்றப்படுவார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைவர் என்று அவர் எழுதி இருந்தார். அபினவ் எழுதிய அந்தக் கடிதத்தை  பாக்யராஜ் மகன் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த கடிதம்.

Leave a Comment