விஜய் படத்தில் திரிஷா நடிப்பது 100% உறுதி.? கண்டுபிடித்த ரசிகர்கள்.

இளம் இயக்குனர்கள் அண்மை காலமாக சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர் அதிலும் குறிப்பாக இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரல் விட்டு என்னும் அளவிற்கு படங்களை இயக்கியிருந்தாலும் அந்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் தான் அதிலும் குறிப்பாக கமலஹாசனை வைத்து அவர் கடைசியாக இயக்கிய விக்ரம் திரைப்படம்.

மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக 400 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது. விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜயுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்க்க இருக்கிறார் தற்பொழுது தளபதி 67 படத்தின் கதையை விறுவிறுப்பாக எழுதி வருகிறாராம்.

தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக சுமார் ஆறு வில்லன்கள் நடிகை இருப்பதாக கூறப்படுகிறது மேலும் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என லோகேஷ் ஏற்கனவே கூறிவிட்டார். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மாஸ்டர் படத்தை தயாரித்த லலித் குமார் தளபதி 67 திரைப்படத்தை தயாரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய் உடன் திரிஷா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது திருஷாவும் விஜயும் இதற்கு முன்பு நான்கு திரைப்படங்களில் நடித்திருந்தனர்  இவர்கள் ஐந்தாவது முறையாக மீண்டும் ஒருமுறை தளபதி 67 படத்தின் மூலம் இணைய உள்ளனர் அதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை திரிஷாவை ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ்.

தற்போது பின் தொடர்ந்து வருகிறார் இதனை கண்டுபிடித்த ரசிகர்கள் தளபதி 67 திரைப்படத்தில் திரிஷா நடிப்பது கன்ஃபார்ம் என கூறி வருகின்றனர். மேலும்  எப்படிப்பட்ட கதாபாத்திரம் திரிஷாவுக்கு கொடுக்கப் போகிறார்கள் என்பது படக்குழு அறிவித்தால் மட்டுமே தெரியும். ஆனால் படக்குழு அதிகார பூர்வமாக சொல்லவில்லை..

Leave a Comment