100 கோடி பத்தாது.. திடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகர் பிரபாஸ் – மிரண்டுபோன தென்னிந்திய சினிமா.!

prabhas-
prabhas-

சினிமா உலகில் ஒரு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்து விட்டால் போதும் அந்த நடிகர் திடீரென தனது சம்பளத்தை பல மடங்கு உயரத்தி ஆச்சரியத்தை கொடுப்பார்கள். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் பிரபாஸ்.

மிகப்பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை ஆனால் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படம் எதிர்பாராத அளவிற்கு பிரமாண்ட வெற்றியை ருசித்தது உடனடியாக அதன் இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டது அந்த படம் முதல் பாகத்தை விட வசூலில் ஆயிரம் கோடிக்கு மேல் அள்ளி புதிய உச்சத்தை தொட்டது .

அதன் பிறகு நடிகர் பிரபாஸ்யின் சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டியது. பாகுபலி, பாகுபலி 2 படங்களை தொடர்ந்து பிரபாஸ் தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்கள் அனைத்துமே பிரமாண்ட பட்ஜெட்டில் உருவான திரைப்படங்கள்தான் அதேபோல அந்த படங்களுக்காக 100 கோடி சம்பளம் கேட்டு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் பிரபாஸ் சஹா, ராதே ஷியாம் போன்ற படங்களில் நடித்தார். இருப்பினும் அந்த படங்கள் வெளிவந்து மிகப்பெரிய தோல்வியை தழுவின இப்பொழுது பிரபாஸ் கையில் ஆதிபுருஸ், சலார் ஆகிய படங்கள் இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் பிரபாஸ் திடீரென தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறார்.

தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் சம்பளத்தை மட்டும் குறைந்தபாடில்லாமல் அதிகரித்துள்ளது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது ஆனால் தற்போது அவர் ஒரு படத்திற்கு சுமார் 120 கோடி கேட்கிறாராம். ரஜினிக்கு அடுத்ததாக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக பிரபாஸ் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.