இன்று பிறந்தநாள் காணும் “பார்த்திபன்” பற்றி நமக்கு தெரியாத 10 விஷயங்கள்.! சின்ன வயசிலேயே ஆளு ஒரு மாதிரி தான்

Parthiban :  பார்த்திபன் இயக்குனராகவும், நடிகராகவும் தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறார். இவர் கடைசியாக இயக்கி, நடித்த இரவிழின் நிழல் படம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார் இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காணும் பார்த்திபன் பற்றி நமக்கு தெரியாத 10 விஷயங்கள் பற்றி பார்ப்போம்..

1.  ராதாகிருஷ்ணன் – பத்மாவதி தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் இவருடைய உண்மையான பெயர் மூர்த்தி.  2. பார்த்திபனின் அப்பா குறைந்த ஊதியம் வாங்கும் தபால்காரர் ஆக இருந்ததால் ஆரம்பப் பள்ளியை அங்கிருந்த கார்ப்பரேஷன் பள்ளியில் படித்தார்.

3. கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் கடைசியில் தன் தாலியில் கிடந்த குண்டுமணி தங்கத்தை அடகு வைத்து நியூ கல்லூரி என்கின்ற கல்லூரியில் படிக்க வைத்தார்.  4. கல்லூரியில் சேர்ந்த பத்தாவது நாளே அந்த கல்லூரி பிடிக்காமல் அடையாரில் இருக்கும் பாலிடெக்னிக் ஒன்றில் சேர பார்த்திபன் முயற்சித்ததால் அடகு வைத்த அந்த நகையை எல்லாம் விற்க வேண்டிய நிலைக்கு இவரின் தாயார் திருமதி பத்மாவதி தள்ளப்பட்டார்.

5. அடையாறு பாலிடெக்னிக்கில் 10 மாதங்கள் மட்டுமே படித்த நிலையில் அங்கிருந்து பாதியிலேயே வெளியேறினார். 6. சித்தப்பா உடன் சினிமா சூட்டிங்  மூர்த்தி என்கின்ற பார்த்திபனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை தொற்றி  கொண்டது. 7. எங்கே ஒரு நாளு டயலாக்க இங்க வந்து பேச சொல்லு பார்ப்போம் என சவால் விட அவர் சொன்னது போலவே மூர்த்தி என்கின்ற அந்த சிறுவனால் அப்பாவிடம் அந்த வசனங்களை பேசிக் காட்ட முடியாமலேயே போனது.

8. எஸ் பி ராமதாஸ் ட்ராமா என்கின்ற நாடக கம்பெனியின் நாடகங்களில் நடித்து படிப்பில் தேர்ச்சி பெற்றார்.  9. நீயெல்லாம் ஹீரோ மெட்டீரியலே இல்லை… ஒரு ஹீரோவுக்கான முகமோ.. நிறமோ.. உன்னிடம் இல்லை என பலரும் நிராகரிப்பது ஞாபகத்திற்கு வர..  10. தாம்பத்தியத்தில் உள்ள திரைப்படக் கல்லூரியில் டி எஃப் இ என்று சொல்லப்படும் டிப்ளமோ இன் பிலிம் எடிட்டிங் படிப்பை முடித்தார்.

அதன் பிறகு ஒரு தலை ராகம் சங்கர் போன்ற ஹீரோக்களுக்கு டப்பிங் பேசி மாதம் 6 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்தார். திடீரென உதவி இயக்குனராக வேண்டும் என்பதால் 6000 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த டப்பிங் வேலையை விட்டுவிட்டு 300 ரூபாய்க்கு பாக்யராஜிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். இப்படி படிப்படியாக முன்னேறி தாவணி கனவுகள் படத்தில் தபால்காரராக முதலில் அறிமுகமானார் அதன் பிறகு அவருடைய வளர்ச்சி அமோகமாக இருந்தது. தற்போது இந்த இடத்தில் இருக்கிறார்.