நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தினமும் 10 நிமிடம் இதற்காக ஒதுக்குங்கள். நயன்தாரா பேச்சு.!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக பார்க்கப்படுபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் இதுவரை 70 – க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான் இப்பொழுதும் கூட வருடத்திற்கு ஒன்று இரண்டு படங்களில் நடித்து வருவதால் இவரது மார்க்கெட் குறையாமல் இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் படங்களில் நடிக்கிறார் மேலும் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கையில்  ஜவான், இறைவன், நயன்தாரா 75 மற்றும் பல்வேறு பெயரிடப்படாத புதிய படங்களிலும் கமிட் ஆகியுள்ளார் இதில் விறுவிறுப்பாக ஜவான் மற்றும் இறைவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு போய்க் கொண்டு வருகிறது.

இப்படி ஓடிக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா சிலசமயம் பல்வேறு விழாக்களிலும் கலந்து கொண்டு  வருகிறார் அப்படி தனியார் கல்லூரி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த கல்லூரியின் பிராண்ட் அம்பாசிடராக தேர்வு செய்யப்பட்ட நடிகை நயன்தாரா மாணவர்களுக்கு சில அறிவுரைகளை கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

கல்லூரியில் படிக்கும் பொழுது நண்பர்களுடன் ஜாலியாக இருக்கலாம் கல்லூரி வாழ்க்கை மகிழ்ச்சியானது ஆனால் அதே நேரத்தில் கல்லூரியில் நீங்கள் யாருடன் பழகுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம் என தெரிவித்தார். கல்லூரி நாட்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்திற்கானது என்பதை மறந்து விட வேண்டாம் என்று கூறிய நயந்தாரா..

கல்லூரி முடிந்து வெற்றியடைந்த நபராக மாறினாலும் பணிவாக இருக்க வேண்டும் நிதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார் மேலும் உங்கள் பெற்றோர்களுக்கு தினமும் ஒரு பத்து நிமிடதையாவது செலவிடுங்கள் என்றும் அதில் தான் அவர்களது மகிழ்ச்சி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் நயன்தாராவின் இந்த பேச்சு தற்பொழுது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment