வேற மொழிகளில் மாபெரும் வெற்றியடைந்த தமிழில் பல்பு வாங்கிய 10 திரைப்படங்கள்.! தளபதி மட்டும் தப்பிட்டாரே தல மாட்டிக்கிட்டாரு

vijay-ajith
vijay-ajith

பொதுவாக ஒரு படத்திற்கு முறையான கதாபாத்திரம் அமையவில்லை என்றால் அந்த திரைப்படத்தில் எவ்வளவு பெரிய நடிகர் நடித்தாலும் வெற்றி பெற முடியாது. சொல்லப்போனால் பாகுபலி திரைப்படத்தில் பிரபாஸ் கதாபாத்திரத்திலும் கட்டப்பா கதாபாத்திரத்திலும்  வேறு எந்த நடிகராவது நடித்திருந்தால் வெற்றியடைந்து இருக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அப்படி தான் பல திரைப்படங்களை உதாரணத்துக்கு கூறலாம் அதிலும் ஒரு சில திரைப்படங்களில் ஒரு சில நடிகர்கள் நடித்தால் மட்டுமே ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் அந்த கதாபாத்திரத்தில் வேறு யாராவது நடித்தால் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருபவர் இவர் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் ரஜினியை தவிர வேறு யார் நடித்தாலும் படம் ப்ளாப் ஆகி இருக்கும்.  அப்படி தான் மற்ற மொழிகளில் ஹிட்டான திரைப்படங்களில் தமிழில் வேறு ஒரு நடிகர் நடித்து ஃப்ளாப் ஆன திரைப்படங்களும் இருக்கின்றன. அவற்றின் லிஸ்ட் இங்கே காணலாம்.

கஜேந்திரா- கஜேந்திரா திரைப்படம் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்து ராஜமௌலி இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் தெலுங்கில் சிம்மஹரி என தெலுங்கில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜயகாந்த் கஜேந்திரா என்ற பெயரில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தெலுங்கு சினிமாவில் 24 வயது ஹீரோவாக நடித்து இருப்பார் ஆனால் தமிழில் 50 வயது நிறைந்த விஜயகாந்த் நடித்த இருந்ததால் இந்த திரைப் படம் தோல்வியை தழுவியது.

ஒஸ்தி – ஒஸ்தி திரைப்படம் தமிழில் சிம்பு நடித்து வெளியாகிய திரைப்படம் இந்த திரைப்படம் ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது. ஹிந்தியில் தபாங் என்ற பெயரில் வெளியாகிய இந்தத் திரைப்படம் தமிழில் சிம்புவை வைத்து எடுத்தார்கள் ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு சிம்பு நடித்தாலும் பிடிக்காமல் போனது.

தில்லாலங்கடி – தெலுங்கு சினிமாவில் மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் கிக் இந்த திரைப்படத்தில் ரவி தேஜா நடித்து இருந்தார் அதேபோல் தமிழில் மோகன்ராஜா தில்லாலங்கடி என்ற பெயரில் இயக்கினார் ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் தோல்வியடைந்தது.

ஏகன் – ஹிந்தி சினிமாவில் மேஹீனா என்ற திரைப்படத்தில் ஷாருக்கான் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் இதனை தமிழில் ஏகன் என்ற பெயரில் அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்து தோல்வியடைந்து திரைப்படம்.

பெங்களூர் நாட்கள்- மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் பெங்களூர் டேஸ் இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா ஆகியோர் அவர்கள் நடித்து இருந்தார்கள். ஆனால் இந்த திரைப்படத்தில் தமிழில் ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா ஆகியவைகளை வைத்து எடுத்திருந்தார்கள் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தது.

அதேபோல் டெம்பர் திரைப்படம் தமிழில் அயோக்கியா என்ற பெயரில் விஷால் நடித்து மாபெரும் தோல்வியடைந்த திரைப்படமாக கருதப்படுகிறது மேலும் ஜூலாயி தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம்தான் இந்த  திரைப்படத்தை பிரசாந்த் சாகசம் என்ற பெயரில் நடித்து மாபெரும் தோல்வி அடைந்தது.  மேலும் நானி நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் அல முதலந்தி என்ற பெயரே மாபெரும் ஹிட்டடித்தது ஆனால் தமிழில் கௌதம் கார்த்திக் நடிப்பில் என்னமோ ஏதோ என்ற தலைப்பில் வெளியாகி மாபெரும் தோல்வியடைந்தது.  இப்படித்தான் குசேலன் சேட்டை ஆகிய திரைப்படங்களும் மற்ற மொழிகளில் வெளியாகி ஹிட்டடித்த தமிழில் தோல்வியடைந்த திரைப்படங்களாக கருதப்படுகின்றன.