தயாரிப்பாளரை நடு தெருவில் நிறுத்திய விஜய் சேதுபதியின் 10 படங்கள்..! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்..!

ஒரு நேரத்தில் விஜய் சேதுபதி திரைப்படம் என்றாலே போதும் ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய குடும்பத்துடன் சென்று தியேட்டரில் பார்ப்பது வழக்கமான ஒன்றாக அமைந்தது ஆனால் நாளடைவில் அவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் படுதோல்வியை சந்தித்தது மட்டுமில்லாமல் இதனால் தயாரிப்பாளர்கள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகி விட்டார்கள்.

அந்த வகையில் குறிப்பிட்ட ஐந்து வருடங்களாக அவர் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் வெற்றியை கொடுத்தாலும் கிட்டத்தட்ட 10 திரைப்படங்களுக்கு மேலாக அவர் வெறும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறார் அந்த வகையில் விஜய் சேதுபதியை மண்ணை கவ்வ வைத்த தோல்வி திரைப்படங்கள் பற்றி பார்க்கலாமா.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் இந்த திரைப்படம் விஜய் சேதுபதி கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படமாகும் இந்த திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மிகப்பெரிய தோல்வி திரைப்படம் ஆக கருதப்பட்டது அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி அப்படிப்பட்ட கதையில் எப்படி நடிக்க சம்மதம் தெரிவித்தார் என பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

ஜூங்கா  திரைப்படமானது கோகுல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் சாயிஷா கதாநாயகியாகவும் நடித்த இந்த திரைப்படம் 27 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆனால் இந்த திரைப்படம் இந்த பட்ஜெட்டில் பாதியை கூட வசூலிக்காமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

சீதக்காதி திரைப்படம் ஆனது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆகும் திரைப்படம் விஜய் சேதுபதியின் 25 வது திரைப்படம் ஆக கருதப்பட்டாலும் எதிர்பாராத அளவிற்கு இந்த திரைப்படம் வெற்றியை பெறாமல் தோல்வியை சந்தித்தது.

சிந்துபாத் திரைப்படம் ஆனது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் கதை அம்சம் இல்லாத காரணத்தினால் படும் தோல்வியை சந்தித்தது.

சங்கத் தமிழன் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடிகை ராசி கண்ணா நிவேதா பெத்துராஜ் போன்றவர்கள் கதாநாயகியாகவும் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல் சம்பந்தமில்லாமல் ரிலீஸ் ஆகி இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

லாபம் இந்த திரைப்படம் எஸ்பி ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் இதில் விஜய் சேதுபதி சுருதிஹாசன் கூட்டணியில் உருவாகி இருந்தாலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் படத்தின் கதை சரியாக இல்லாததன் காரணமாக படும் தோல்வியை சந்தித்தது.

அதன் பிறகு துக்ளக் தர்பார் திரைப்படத்தில் மாஞ்சிமா மோகன் உடன் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படமும் மாபெரும் தோல்வியை சந்தித்த நிலையில் அதன் பிறகு அனபெல் சேதுபதி என்ற திரைப்படத்தில் டாப்ஸியுடன் இணைந்து ஒரு திரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தால் இந்த திரைப்படம் இணையத்தில் வெளியாகி மிகப்பெரும் அளவில் ரசிகர்களை தவறாமல் தோல்வியை சந்தித்து விட்டது.

தொடர் தோல்வியை சந்தித்த நிலையில் மீண்டும் மாமனிதன், டி எஸ் பி போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment