10 நாள் முடிவில் இரவின் நிழல் திரைப்படம் – வசூலித்த மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

இயக்குனர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் முதலில் நடிகராக அறிமுகமானவர். பார்த்திபனுக்கு சினிமாவில் ஹீரோவாக நடிப்பதை தாண்டி இயக்குனராக வேண்டும் என்ற எண்ணமும் இருந்துள்ளது. அதனால் பல படங்களை அவரே இயக்கியும் நடித்துள்ளார். தற்போது கூட தொடர்ந்து சினிமாவில் பல படங்களை இயக்கியும் மற்றும் நல்ல கதை அம்சம் வரும் படங்களில் நடித்தும் ஓடிக் கொண்டிருக்கிறார்.

அப்படி மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் என்னும் படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இந்த படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்குள் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் மற்றும் வசூலை அள்ளி வருகின்றன.

தமிழ் சினிமா உலகில் முதல் முதலில் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமாக இதை எடுத்துள்ளார் இயக்குனர் பார்த்திபன். அதனால் இந்த படத்தை எடுத்த பார்த்திபனுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர் மேலும் அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்திபனை அழைத்து படம் சிறப்பாக இருக்கிறது என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் நடித்த பார்த்திபன், பிரிகிடா, பிரியங்கா ரூத், ரேகா நாயர், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் போன்ற ஒவ்வொருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடித்த நடிகைகளின் நடிப்பு மற்றும் துணிச்சல் பற்றி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றனர்.

அதனால் அடுத்தடுத்த பல பட வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இரவின் நிழல் திரைப்படம் வெளிவந்து இதுவரை 10 நாட்கள் முடிந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் இந்த படம் சுமார் 6.5 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Leave a Comment