10 – நாள் முடிவில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் எது தெரியுமா.? துணிவா.. வாரிசா..

0
thunivu and varisu
thunivu and varisu

திரை உலகில் நடிக்கும் நடிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆசை நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் அந்த வகையில் அஜித், விஜய் நம்பர் 1 இடத்தை பிடிக்க தொடர்ந்து போட்டி போட்டு வருகின்றனர். பல தடவை அஜித் – விஜய் மோதி உள்ளனர். அதில் விஜயின் கை ஓங்கி இருந்தாலும்..

அஜித் சும்மா விடுவதில்லை. தொடர்ந்து போட்டி போட்டு வருகிறார். கடைசியாக அஜித்தின் வீரம் – விஜய்யின் ஜில்லா படங்கள் நேருக்கு நேர் மோதியதில் வீரம் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து எட்டு வருடங்கள் கழித்து அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் பொங்கலுக்கு களம் இறங்கின.

இரண்டு படங்களுக்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அஜித்தின் துணிவு திரைப்படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் பட்டையை கிளப்ப ஆரம்பித்தது. மறுபக்கம் விஜயின் வாரிசு திரைப்படம் குடும்ப ஆடியன்சை தற்போது வெகுவாக கவர்ந்து இழுத்து உள்ளதால் அந்த படத்தின் வசூலும்..

நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் 10 நாள் முடிவில் எந்த திரைப்படம் தமிழகத்தில் அதிக வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது. பத்து நாள் முடிவில் அஜித்தின் துணிவு திரைப்படம் 100 கோடி வசூலித்து இருக்கிறது.

விஜயின் வாரிசு திரைப்படமும் 100 கோடி வசூலித்துள்ளது ஆனால் லட்சம் அல்லது சில கோடிகளில் அதிகம் அள்ளி அஜித்தின் துணிவு கை ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் தமிழ்நாட்டில் எப்பொழுதுமே அஜித் தான் நம்பர் ஒன் அவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.