விளம்பர படத்தில் நடிக்க ஜெயம் ரவி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த ஷாக்கிங் தகவல்..

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் முதலில் ஜெயம் என்னும் படத்தில் நடித்து வெற்றி கண்டார் அதன் பிறகு நடிகர் ஜெயம் ரவி சினிமா உலகில்   பொறுமை காத்து நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் இவரது கேரியரில் இதுவரை அதிக ஹிட் படங்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கூட இயக்குனர் மணிரத்தினத்துடன் கைகோர்த்து   பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி செம்ம சூப்பராக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர்.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்து  பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்திலும் விறுவிறுப்பாக ஜெயம் ரவி நடித்து வருகிறார் வெகுவிரைவிலேயே திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதன் பிறகு நடிகர் ஜெயம் ரவி கையில் இறைவன், சைரன் ஆகிய திரைப்படங்களும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி மறுபக்கம் விளம்பர படங்களிலும் நடித்து நல்ல காசு பார்த்து வருகிறார்.

ஏன் அண்மையில் கூட சரவணா ஸ்டோர் விளம்பரம் ஒன்றிக்கு நடிகர் ஜெயம் ரவி நடித்து அசத்தி உள்ளார்.  இப்படி இருக்கின்ற நிலையில்  நடிகர் ஜெயம் ரவி இப்பொழுது விளம்பரத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து ஒரு தகவல்களை தெரிகிறது அதன்படி பார்க்கையில்

ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஜெயம் ரவி கிட்டத்தட்ட 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என தகவல்கள் வெளி வருகின்றன படத்தில் நடிப்பதை விட இதில் 5 நிமிடம் நடித்தாலும் 5 கோடி என்பது மிகப்பெரிய ஒரு தொகை தான். இந்த தகவல் தற்பொழுது  இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version