புதிய சொகுசு காரை வாங்கிய “RRR” பட நடிகர்.! fancy நம்பருக்காக எவ்வளவு லட்சம் செலவு செய்து உள்ளார் தெரியுமா.? சொன்னா நீங்க ஆச்சரியப்படுவீர்கள்.

தெலுங்கு சினிமாவில் இந்தியாவை தொடர்ந்து அவரது மகன் ஜூனியர் என்டிஆர் சிறப்பான திரைப்படங்களை கொடுத்து தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் இவர் திரைப்படங்கள் அனைத்துமே நல்லதொரு வசூலையும் விமர்சனத்தையும் பெற்று வருவதால் தெலுங்கு சினிமாவில் உச்சத்திலேயே இருக்கிறார்.

படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை மாற்றிக் கொள்வது மற்றும் டான்ஸ் ஆகியவற்றில் பின்னி பெடல் எடுப்பது இவரது வழக்கம் அதனால் ரசிகர்கள் இவரை சமுக வலைதளங்களில் பின்தொடரும் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிவரும் RRR என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பை எட்டி உள்ளது. இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் தினத்தன்று வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல நடிகரான ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் 3.16 கோடி மதிப்பிலான lamboghini கார் ஒன்றை வாங்கியுள்ளார்.அந்த காரின் ஃபேன்சி நம்பர்க்காக அவர் சுமார் 17 லட்சம் செலவு செய்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது லட்சக்கணக்கு மதிப்புடைய அந்த ஃபேன்சி நம்பர் TS09 FS 9999 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜூனியர் NTR அந்த  கார் வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைய தளப் பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.junior NTR

junior NTR

Leave a Comment