நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு திரைப்படத்திற்கு இப்போ வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வரும் நடிகைகள் அதற்கேற்றார்போல சம்பளம் அதிகமாக உயர்த்தி வாங்குகின்றனர். அந்த வகையில் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரையிலும் டாப் நடிகர்கள் படங்களில் மட்டுமே நடித்து அசத்தி வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

அதற்கேற்றார் போல சம்பளத்தையும் உயர்த்தி சூப்பராக வலம் வருகிறார். மேலும் தென்னிந்திய  சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக இவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் ஒரு திரைப்படத்திற்கு சுமார் 4 கோடி சம்பளம் வாங்குவதாக தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் உயர்ந்து உள்ளவர் நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் இப்போது தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் கூட அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்து புஷ்பா படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தார். இவரது நடிப்பு அந்த படத்தில் சிறப்பாக இருந்ததன் காரணமாக தற்போது இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா  ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி பார்க்கையில் நடிகை ராஷ்மிகா மந்தனா  சுமார் 3 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்செய்தி தற்போதைய இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது மேலும் குறைந்த படங்களிலேயே நடித்து இவ்வளவு சம்பளம் வாங்குவது மிகப்பெரிய ஒரு விஷயம் என கூறி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Leave a Comment