தனி விமானத்தில் தேனிலவுக்கு சென்ற மகாலட்சுமி ரவீந்தர்.! வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் கடந்த வாரம் திருப்பதியில் மிகவும் கோலாகலமாக குடும்பத்தினர்கள் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற்றது ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டது தற்பொழுது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தேனிலவு செல்ல உள்ளார்கள் இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சன் மியூசிக் தொலைக்காட்சிகள் தொகுப்பாளராக அறிமுகமான மகாலட்சுமி தொடர்ந்து சன் டிவியில் ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அன்பே வா சீரியலில் நடித்திருந்தார் கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிரபலமடைந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதையும் தொடர்ந்தார். இவ்வாறு பணத்துக்காக தான் மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் எனக் கூறிய நிலையில் அதற்கு பதில் அளித்த மகாலட்சுமி ஒரு மாதத்திற்கு சுமார் மூன்றிலிருந்து நான்கு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறியிருந்தார்.

இவரை தொடர்ந்து தயாரிப்பாளர் ரவீந்தர் லிப்ரா ப்ரொடக்ஷன் கம்பெனியை நடத்தி வருகிறார். அதில் நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற பத்திருக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவ்வாறு இவர்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில் சோசியல் மீடியாவில் பயங்கர ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. இந்நிலையில் தனி விமானத்தில் ரவீந்தர், மகாலட்சுமி இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனி தீவுக்கு தேனிலவுக்கு செல்கிறார்கள் என்றும் அப்படியே திருச்சி குல தெய்வத்துக்கும் செல்வதாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

mahalakshmi raveenthar
mahalakshmi raveenthar

இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் வெளியிட்ட வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இவர்களைப் பற்றி ரவீந்தருக்கு 52 வயது எனவும், மகாலட்சுமிக்கு 30 வயது எனவும் சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது அதற்கு பேட்டியில் பதிலளித்த ரவீந்தர் எனக்கு 38 வயதுதான் ஆகிறது என்றும் மகாலட்சுமிக்கு 35 வயதாகிறது என்றும் கூறினார்.

Leave a Comment