ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் சேனலில் வர்ணனையாளராக இருக்கும் பாவனா ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? தெரிஞ்சா நீங்க ஆச்சரியப்படுவீங்க..

சின்னத்திரையில் நீண்ட தூரம் பயணித்த பிரபலங்கள் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த வாய்ப்பை கைப்பற்றி தனது திறமையை வெளிக் காட்டிக் கொண்டே முன்னேறுகின்றனர் அந்த வகையில் சின்னத்திரையில் சீரியல்களிலும் தொகுப்பாளராகவும் பணியாற்றிய பிரபலங்கள் தற்போது நல்லதொரு இடத்தை பிடித்து நல்ல காசு பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர்-1 போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளினி பாவனா.  விஜய் டிவி தொலைகட்சியில் ஓடிக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு பிறகும்.

பல்வேறு நிகழ்ச்சி மற்றும் படங்களின் இசை வெளியீட்டு விழாகளை நல்ல முறையில் தொகுத்து வழங்கி தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர் மக்கள் மனதில் நிலைத்து நின்றார் பாவனா. இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென தனது ரூட்டை மாற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் கிரிக்கெட் சேனலில் வர்ணனையாளராக பணியாற்றிவருகிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இவர் சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் வெளியீட்டு அசத்தி வருகிறார். இதனால் இவரை சமூக வளைத் தளத்தில் பின்பற்றுவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே.. இதனால் பாவனா எந்த வேலை செய்தாலும் மீதி இருக்கின்ற நேரத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு விருந்து கொடுத்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் பாவனா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் தமிழ் சேனலில் ஒரு நாளைக்கு பணியாற்றுவதற்காக அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது அதாவது இவர் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment