யோகி பாபுவுடன் இணைந்து நடிக்க எத்தனை வருடங்கள் ஆனாலும் காத்து இருக்க ரெடி – பிரபல இயக்குனர் அதிரடி.! யோகி பாபு என்ன பதில் சொன்னார் தெரியுமா.?

0

சினிமாவில் திறமை உள்ளவர்கள் தொடர்ந்து வெற்றியை கொடுப்பதால் அவர்கள் உச்சத்தை நோக்கி பயணிக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனராகவும், நடிகராகவும் ரவுண்ட் அடித்துக் கொண்டு வருபவர் கௌதம் மேனன்.

இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த நவம்பர் ஸ்டோரி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் நடிக்கவும், இயக்கவும் ரெடியாக இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் கௌதம் மேனன் “மண்டேலா” திரைப்படத்தை பார்த்துவிட்டு வருங்காலத்தில் யோகி பாபு உடன் வருங்காலத்தில் வேலை செய்ய  விருப்பம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது ஹீரோவாகவும் பல்வேறு படங்களில் நடித்து வெற்றியை கண்டு வருகிறார்  யோகி பாபு நடிப்பில் சமிபத்தில் வெளியான திரைப்படம் ஒவ்வென்றும் வெற்றியைப் குவிகின்றன.

அந்த வகையில் மண்டேலா படம் யோகி பாபுக்கு நல்ல படம். சலூன் கடை வைத்து கிராமத்தில் ஒரு மனிதனாக கூட மதிக்கப்படாத ஒரு வாழ்க்கையை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது இதில் யோகி பாபுவின் நடிப்பு வேற லெவல் இருந்தது. படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் யோகி பாபுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதுபோல தற்போது கௌதம் மேனனும் மண்டேலா  படத்தில் யோகி பாபுவின் நடிப்பை பார்த்து மெய்சிலிர்த்துப் போனார். யோகி பாபு உடன் பணியாற்ற நான் காத்திருக்கிறேன் என கௌதம் மேன விருப்பம் தெரிவித்தார் இதை பார்த்த யோகி பாபுவும் நன்றி கெளதம் மேனன் சார் என்று பதிவிட்டுள்ளார்.