தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார், படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில் விஜய் வீட்டில் ஐடி ரைட் நடந்ததால் சூட்டிங் ஸ்பாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனால் நெய்வேலி சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார், ஐடி ரெய்டு முடிந்ததும் மீண்டும் நெய்வேலி சுரங்கப்பாதையில் நடந்துவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்தநிலையில் பாஜகவினர் சுரங்கப்பாதையில் சூட்டிங் நடத்த கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டார்கள், அதனால் விஜய்க்கு ஆதரவாக அந்த இடத்தில் ரசிகர்கள் கோசம் இட்டார்கள். கடல்போல் திரண்ட ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை ஓட விட்டார்கள்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, சுரங்கப்பாதையில் ஷூட்டிங் நடத்த முறையாக அனுமதி பெற்றிருந்தும் தேவை இல்லாமல் போராட்டம் செய்பவர்களை விட்டுவிட்டு ரசிகர்களை காவல்துறையினர் தாக்கியது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
#ಸಮ್ಮರ್2020MASTERಎಂಟ್ರಿ#Master படப்பிடிப்புத் தளத்தில் பிரச்சனை செய்ய வந்த பாஜகவினரை விட்டுவிட்டு, தளபதி விஜய் ரசிகர்களை விரட்டியடிக்கிறது காவல்துறை 😡
அந்த பத்து பேரு இந்தக் கூட்டத்தை பார்த்த அடுத்த நிமிஷம் ஓடிப் போய்ருப்பாங்க 😂 pic.twitter.com/8Rbi4O8Y1f
— ⚒️🛠️ Sridhar Sri 🛠️⚒️ (@sridhar_sri__) February 7, 2020