“பிக்பாஸ்” வீட்டில் அபிநய்யை பார்த்து ராஜு கேட்ட காதல் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த அபிநய் மனைவி.

0

பிக் பாஸ் சீசன் 5 தொடங்கப்பட்டு 50 நாட்களை கடந்து நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நான்கு சீசன்கள் முடிந்து ஐந்தாவது சீசன் வரையிலும் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டு வருவதால் அவருக்கு பதிலாக தற்காலிகமாக நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுவாரசியம் சற்று குறைவாகவே காணப்பட்டன.

ஆனால் தற்போது நிகழ்ச்சி விருவிருப்பாக பல டாஸ்குகளுடன் சிறப்பாக நடந்து வருகின்றன. இதில் சமீபத்தில் 3 வைல்டு கார்டு என்ட்ரி நடந்துள்ளது. அதில் ஒருவராக இந்த வீட்டில் இருந்து இரண்டாவது நபராக எலிமினேஷனிலிருந்து வெளியேறிய அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டினுள் வந்துள்ளார் அதனை அடுத்து பிறகு நடன இயக்குனர் அமீர் இரண்டாவது நபராக வந்துள்ளார்.

மேலும் தற்போது இரு தினங்களுக்கு முன்பு சின்னத்திரை நாயகன் சஞ்சீவ் மூன்றாவது வைல்டு கார்டு என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டினுள் வந்துள்ளார். இந்த நிலையில் பிக்பாஸில் இரு தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட ஒரு எபிசோடில் ட்ருத் ஆர் டேர் என்ற டாஸ்கில் ராஜி அபிநய்யிடம் நீங்கள் பாவனியை காதலிக்கிறீர்களா என கேட்டார்.

அதற்கு அபினை இல்லை என்று கூறினார். இருந்தாலும் இந்தக் கேள்வி போட்டியாளர்கள் மற்றும் மக்களை பெரிதும் அதிர்ச்சியடைய செய்தனர். ஏனெனில் இப்படி ஒரு கேள்வியை ராஜியிடம் இருந்து யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் நிஜ வாழ்க்கையில் அபினை திருமணமானவர் மற்றும் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த கேள்வி மக்கள் பலரையும் குழப்பம் அடைய வைத்தது. இதனிடையே தற்போது இதற்கு பதிலளிக்கும் வகையில் அபிநய்யின் மனைவி அபர்ணா அபிநய் இது குறித்து ஒரு பதிவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அதில் என்ன கூறி இருக்கிறார் பாருங்கள்.

bigboss-
bigboss-