தனுஷின் “பொல்லாதவன்” திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த நடிகைகள் யார் யார் தெரியுமா.? பல வருடங்கள் கழித்து வெளியான உண்மை தகவல்.! அட இந்த நடிகையும் இருக்காங்க..

0

ரஜினி, அஜித், விஜய் ஆகியோரை தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வருபவர் நடிகர் தனுஷ் ஒரு வருடத்திற்கு 2 அல்லது 3 படங்களை கொடுத்து வருவதால் நடிகர் தனுஷ் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகவே இருந்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜகமே தந்திரம் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது அதைத் தொடர்ந்து தற்போது தனது 43வது படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படமும் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அதன் பிறகு அடுத்தடுத்த சிறப்பம்சம் உள்ள படங்களில் நடிக்க உள்ளார்.

அந்த வகையில் அவரது அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து நானே வருவேன் என்ற திரைப் படத்திலும் கமிட் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் பொல்லாதவன் படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான பொல்லாதவன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்த நடிகைகள் குறித்து தற்போது செய்தி ஒன்று கிடைத்துள்ளது அதாவது இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக குத்து ரம்யா என்பவர் நடித்திருந்தார் ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் இரண்டு நடிகைகள்.

dhanush and kajal agarwal
dhanush and kajal agarwal

அவர்கள் வேறுயாருமல்ல தென்னிந்திய திரை உலகில் மிக சிறப்பாக நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால். அவருக்கு அடுத்ததாக நடிகை பூனம் பஜ்வா இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க தேர்வாகி இருந்தார். ஆனால் இவர்கள் இருவரும் ஏதோ ஒரு காரணத்தினால் இந்த படத்தில் இருந்து விலக பின் குத்து ரம்யா இந்த படத்தில்  நடித்தார்.