சிம்புவை இதுவரை பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில் நீங்கள் பார்க்க போகிறீர்கள் மாநாடு படம் குறித்து பேசிய யுவன் சங்கர் ராஜா.

0
maanaadu
maanaadu

வெள்ளித்திரையில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் எஸ்டிஆர் என்கின்ற நடிகர் சிம்பு. ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வந்த நிலையில் அதிலிருந்து மாறுபட்டு சமீபகாலமாக வித்தியாசமான திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து இவர் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வருகின்ற 25 ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள. மாநாடு படத்தை வேற லெவெலில் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சிம்பு, பிரியதர்ஷினி, பிரேம்ஜி, எஸ் ஜே சூர்யா மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது இதில் பல சுவாரசிய தகவல்கள் நடந்துள்ளது இதில் பேசிய நடிகர் சிம்பு எனக்கு பல பிரச்சனைகளை கொடுத்துள்ளனர் அதனை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் என்னை பார்த்துக் கொள்ளுங்கள் என ரசிகர்கள் முன்பு சொல்லி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து பல பிரபலங்களைப் பற்றி பேசி வந்தார் நடிகர் சிம்பு அவர்களில் ஒருவராக யுவன் சங்கர்ராஜாவை பற்றியும் பேசி இருந்தார் எனக்கு பிடித்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அவருக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருக்கிறது என பேசினார் அதன் பின் பேசிய யுவன் சங்கர் ராஜா மாநாடு திரைப்படத்தில் நீங்கள் வழக்கமான சிம்புவை பார்க்க முடியாது வேறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோவுக்கும், ஹீரோயினும் பெரிய அளவு கதாபாத்திரம் கிடையாது சிம்புவுக்கும் சூர்யாவுக்கும் நடக்கும் கதாபாத்திரம்தான் வேறு வேற லெவெலில் இருக்கும் இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது இவர்கள் விளையாடும் விளையாட்டு ரசிகர்களை கொண்டாட வைக்கும். மாநாடு படம் பொழுதுபோக்கு ஒரு நல்ல படமாக இருக்கும் என யுவன் சங்கர் ராஜா கூறி முடித்தார்.