சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட மதன் ரேஷ்மா விற்கு வீடியோ கால் மூலமாக இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சிம்பு..!

தற்போது வெள்ளித்திரையில் ஜோடியாக நடிக்கும் பல்வேறு நடிகர்கள் நடிகைகள் திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒரு செயலாக அமைந்து வந்த நிலையில் தற்போது சின்னத்திரையில் ஒன்றாக இணைந்து நடித்து வரும் ஜோடிகளும்  ரியல் ஜோடிகளாக மாறி வருகிறார்கள்.

இதற்கு எடுத்துக்காட்டாக ஆலியா மானசா இன்னும் பல ஜோடிகளை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் தற்போது மதன் மற்றும் ரேஷ்மா  சீரியலில் இணைந்து நடித்து தங்களுக்குள் காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் செய்து கொண்டார்கள்.

பொதுவாக தொலைக்காட்சியில் அதிகம் ரசிகர்களால் பார்க்கப்படுவது சீரியல்தான் இந்த சீரியல் ஆனது  அனைத்து தொலைக்காட்சிகளிலும் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மட்டுமில்லாமல் தொலைக்காட்சியின் டிஆர்பி அதிகரிக்க இது ஒரு முக்கிய குறிக்கோளாக அமைகிறது.

அந்த வகையில் பூவே பூச்சூடவா என்ற சீரியலானது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இதில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ரேஷ்மா  இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு  பிரபலமானவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

இந்நிலையில் இவர் கனா காணும் சீரியல் மூலம்  பிரபலமான மதன் மீது காதல் ஏற்பட்டு கடந்த ஜனவரி மாதம் தங்களுடைய காதலை இருவரும் பகிர்ந்து கொண்டார்கள் பின்னர் அபி டைலர் என்ற தொடரில் இருவரும் இணைந்து நடித்த போது இருவரும் ரியல் ஜோடி ஆகவே இருக்கலாம் என  கடந்த 15ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த திருமணத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்ட வகையில்  மதன் மற்றும் ரேஷ்மா விற்கு சிம்பு வீடியோ கால்  செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இவ்வாறு சிம்பு வாழ்த்து தெரிவித்த வீடியோவை மதன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பெருமிதம் கொண்டுள்ளார்.

simbu-1
simbu-1
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment