இந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர் சமந்தா மற்றும் கீர்திசுரேஷ் இருவருக்கும் தமிழ் மற்றும் மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் சினிமா உலகில் உயர்ந்து கொண்டே ஓடுகின்றனர்.
சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பலரும் ஒன்றாக இணைந்து நடிப்பதில்லை ஆனால் கீர்த்தி சுரேஷிம், சமந்தாவும் இணைந்து மகாநதி என்ற திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் நல்ல நண்பர்களாக மாறி விட்டனர்.
அதிலிருந்து எங்கேயாவது பபுதிய நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்து கொண்டு ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சூப்பரான ஒரு வீடியோவை வெளியிட்டு சமந்தாவுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது படப்பிடிப்பு தளத்திற்கு சென்று உள்ளார் அங்கு ஒரு அழகிய குட்டி பெண்ணை சந்தித்துள்ளார். அவரிடம் உனக்கு வருங்காலத்தில் யார் போல ஆவதற்கு விரும்புகிறார் என கேட்டார் அதற்கு அந்த குழந்தை நடிகை சமந்தா போல வரவேண்டும் என தன் விருப்பத்தை சொல்லியிருக்கிறார்.
இந்த வீடியோவை வெளியிட்டு சமந்தா உன்னுடைய மிகப்பெரிய தீவிர ரசிகை இங்கே இருக்கிறார். அவரை நீ ஒரு முறையாவது சந்திக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோவை பார்த்து நடிகை சமந்தா உடனே யார் அந்த குட்டி பொண்ணு என கேட்டுள்ளார்.