சந்தானத்தின் டகால்டி திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.!

0
santhanam
santhanam

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் சந்தானம் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானார், கவுண்டமணி செந்தில், வடிவேலு ஆகியவர்களுக்கு அடுத்தபடியா சந்தானம் மிகப் பெரிய காமெடியனாக உருவெடுத்தார்.

ஆனால் ஒரு காலகட்டத்தில் காமெடியனாக நடிப்பதை விட்டுவிட்டு முழுநேர ஹீரோவாக நடிப்பதற்கு களமிறங்கினார், முழுநேர ஹீரோவாக வெற்றியும் கண்டுள்ளார், இவர் நடித்த தில்லுக்கு துட்டு 2, ஏ1 திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில் இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டகால்டி’. நாயகனாக சந்தானம் நடிக்கும் இப்படத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரித்திகா சென் நாயகியாக அறிமுகமாகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.