சத்தமே இல்லாமல் ஜெயம் ரவி வெளியிட்ட மாஸான போஸ்டர்.! எதற்காக தெரியுமா.?

0
jayam-ravi
jayam-ravi

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் இது குறித்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் மிகவும் பிரமாண்டமாக வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது அது மட்டுமல்லாமல் படத்தின் மீது உள்ள ஆர்வத்தையும் தூண்டி உள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வருகின்ற 6ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் அமைந்துள்ள சோழ சோழ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த பாடல் youtube-ல் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன் நிலையில் பொன்னியின் செல்வன் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து பட குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்கள் அறிவிப்பை வெளியிடும் நிலையில் தற்போது ஜெயம் ரவி அவர்களும் இந்த நிகழ்ச்சிக்கான போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் வருகிறான் சோழன் என்றும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

jayam ravi
jayam ravi

இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படத்தின் முதல் பாகம் மட்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளன. இந்த படத்தை பிரபல எழுத்தாளர்  கல்கியின் நாவலை தழுவி உருவாக்கிய இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் ஜெயம் ரவி அவர்களுக்கு அந்த நாவலை படிக்கும் பொழுது நமக்கும் சோழர் சாம்ராஜ்யத்தில் வாழ்ந்ததைப் போல உணர்வு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த அனுபவத்தை கொடுக்குமா கொடுக்காத என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.