எம்.ஜி.ஆர் – ன் வழியை பின்பற்றுவாரா விஜய்.!விவரம் இதோ!!

தமிழ்நாட்டில் அசைக்க முடியாத பெரும் சக்தியாக உருவாகி வருபவர் நடிகர் விஜய். இவருக்கு என பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டு மக்கள் இவருக்கு பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.ஏனென்றால் இவர் மக்களுக்கு பொது சேவை மற்றும் பல உதவிகளும் செய்து வருகிறார்.இவரது திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது கோடிக்கணக்கில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து வருகின்றனர். ஏனென்றால் இவரது படத்தில் கருத்திலும் அமைக்கப்பட்டிருக்கும் என்பதற்காக. இந்த நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் மிகப் பெரிய வெற்றி படமாக உருமாறிய நிலையில் வருமான வரித்துறையினர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது வருமான வரி சோதனை நடத்தினர்.

அமைதியாக நடக்க வேண்டிய வருமான வரி சோதனை அப்படி நடக்காமல் நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த அந்த இடத்திற்குகே வருமானவரி உழியர்கள் வந்து விஜய்யை அழைத்துச் சென்றனர்.விஜயின் வீடு பனையுரில் இருப்பதை அறிந்த வருமானவரியினர்.அவரை அழைத்து சென்று சோதனை நடத்தினர். அங்கு ஒன்றும் இல்லாததால் வருமானவரித் துறையினர் அங்கிருந்து சென்றனர்.

இதனை ரசிகர்கள் இதை அரசியல் சூட்சமம் என்று நினைத்து வந்த நிலையில் அடுத்த நாளலே ஒரு கட்சியினர் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது இப்படத்தில் மட்டுமில்லாது மெர்சல் மற்றும் சர்க்கார் போன்ற படங்களிலும் பல பிரச்சனைகள் வந்தன.

இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது எம்ஜிஆருக்கு ஒரு காலகட்டத்தில் நடந்த பிரச்சனை போன்றே இப்பொழுதும் நடக்கிறது என சில பத்திரிகை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எம்ஜிஆரின் காலகட்டத்திலும் இதுபோன்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.இதன் பின்பு எம்ஜிஆர் அரசியலுக்கு வந்து மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கொண்டுவந்தார்.இத்தகைய நிலையில் ரசிகர்கள் மேலும்  எங்களுக்கு அழுத்தத்தை கொடுத்தால் பெரும் விளைவுகள் ஏற்படும் என ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.

Leave a Comment