பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கின்ற ஒவ்வொரு திரைப்படமும் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்படுகின்றன அந்த வகையில் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ராமாயணத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
ஹிந்தி மற்றும் தெலுங்கு இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது மேலும் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதி புரு ஷ் திரைப்படம் மிக பிரமாண்ட பொருட்செலவில் உருவாகிறது.
இந்த திரைப்படம் ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகுவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது பிரபாஸ் ராமராக நடிக்கிறார். சீதா தேவியாக நடிகை கீர்த்தி சனோனன் நடிக்கிறார் இந்த திரைப்படம் ஒரு 3டி திரைப்படமாக உருவாகி வருகிறது இந்த படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் ஹிந்தியில் டாப் நடிகராக வலம் வரும் சையப் அலிகான் நடிக்கிறார் .
ராவணன்னாக இவர் நடித்துள்ளது இவருக்கு ரொம்ப மகிழ்ச்சி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த படத்திலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் உருவாகி வருவதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை வாரங்களில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் ராவணன் கெட்டப்பில் நடிகர் சையப் அலிகான் இருக்கும் புகைப்படம் வெளியாகி தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.