நாங்களும் அப்போ ஒல்லி தான்.! புகைப்படத்தை வெளியிட்டு மாஸ் காட்டும் யோகி பாபு.!

0
94

நாங்களும் அப்போ ஒல்லி தான்.! புகைப்படத்தை வெளியிட்டு மாஸ் காட்டும் யோகி பாபு.!

தமிழ் சினிமாவில் “யாமிருக்க பயமேன்” திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் யோகி பாபு. இவர் நடித்திருந்த பண்ணி மூஞ்சி வாயன் கதாபாத்திரம் மாபெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.

yogi babu
yogi babu

இந்த படத்தை தொடர்ந்து, படிப்படியாக சிறு பட்ஜெட் படங்களில் நடிக்க துவங்கினார். இவருடைய காமெடி, மற்ற காமெடி நடிகர்களின் சாயலில் இல்லாமல் மிகவும் எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்களிடம் இவருடைய காமெடி ரசிக்கப்பட்டது. மேலும் முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன் என்கிற பெயரை பெற்றுள்ளார். கடந்த வருடம் மட்டும் இவர் நடிப்பில் 12 திரைப்படங்கள் வெளியாகியது அதில் 8 படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது. சில படங்களில் இவருடைய காமெடி ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது.

இவர் நடிக்க வாய்ப்பு தேடிய காலங்களில் இவர் மிகவும் குண்டாக இருக்கிறார் என இவரை ஒதுக்கியவர்களும் உண்டு. ஆனால் அது தான் தற்போது இவருடைய பிளஸ் ஆக மாறியுள்ளது. யோகிபாபு என்ன நினைத்தார் என தெரியவில்லை.

yogi babu
yogi babu

திடீர் என இவர் ஒல்லியாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “நாங்களும் ஒல்லிதான் ஒரு காலத்துல” என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.