சியோமி நிருவனத்தின் முதல் 5G போன் அனால் விலை தான்…!?

0
68

சியோமி நிருவனத்தின் முதல் 5G போன் அனால் விலை தான்…!? | Xiaomi mi MIX 3 5G

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சியோமி நிறுவனம், சொன்னதை போல புதிய Mi MIX 3 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது சியோமி நிறுவனத்தின் முதல் 5G ஸ்மார்ட்போன் ஆகும்.

xiaomi mi mix3 5g
xiaomi mi mix3 5g

சியோமி mi MIX 3 5G சிறப்பம்சங்கள்:

6.39″ 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 ஆக்டா கோர் பிராசஸர் அட்ரினோ 640 GPU மூலம் செயல்படுகிறது. ஆன்ட்ராய்டு 9.0 அடிபடியாக கொண்ட MIUI 10 அப்டேடட் வெர்சனில் இயங்குகிறது. 6 ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி மெமரி கொண்டுள்ள இந்த மொபைல் டுயல் பிரைமரி கேமரா மற்றும் டுயல் செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

xiaomi mi mix3 5g
xiaomi mi mix3 5g

12 எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ், 12 எம்பி டெலிபோடோ லென்ஸ் என இரண்டு பிரைமரி கேமரா, 24 எம்பி மற்றும் 2 எம்பி செல்ஃபி கேமரா மூலம் சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம். இரண்டு சிம் கார்ட், 5ஜி சப்6, டூயல் 4ஜி வோல்ட்இ, 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி திறன் கைரேகை சென்சார், குயிக் சார்ஜ் 4.0 பிளஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் என பல அம்சங்களை கொண்டுள்ளது.

ஆனால் இந்த ஸ்மார்ட்போன் விலை தான் கொஞ்சம் அதிகம் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.48,260 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.