பெங்களூரில் உலகின் மிகப்பெரிய சாம்சங் ஷோரூம்

0
131

பெங்களூரில் உலகின் மிகப்பெரிய சாம்சங் ஷோரூம் | World Largest Samsung Showroom in Bangalore

உலக மொபைல் போன் மார்க்கெட்டில் முதலிடத்தில் உள்ள சாம்சங், இந்தியாவில் தனது தயாரிப்புகளை அவ்வபோது அறிமுகம் செய்து வருகின்றது. இந்திய சந்தை என்பது மொபைல் போன் சந்தையில் மிகப்பெரியது என்பதாலும் இங்கு போட்டி அதிகம் என்பதாலும் இந்தியாவில் தனது தயாரிப்புகளை வெளியிடுவதில் சாம்சங் நிறுவனம் அதிக அக்கறை காட்டி வருகின்றது.

World Largest Samsung Showroom in Bangalore
World Largest Samsung Showroom in Bangalore

இந்த நிலையில் பெங்களூரில் சாம்சங் நிறுவனம் ஒரு ஷோரூம் ஒன்றை சமீபத்தில் அமைத்துள்ளது. இந்த ஷோரூம்தான் உலகின் மிகப்பெரிய சாம்சங் ஷோரூம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகையை பெருமையை உடைய இந்த ஷோரூம் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

பெங்களூரில் உள்ள முக்கிய பகுதியில் சுமார் 3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாம்சங் ஷோரூமை அந்நிறுவனத்தின் ஆசிய பிரிவு தலைவர் இன்று திறந்து வைத்தார்.

இந்த ஷோரூமில் சாம்சங் நிறுவனத்தின் ஆரம்பகால மாடல்கள் முதல் லேட்டஸ்ட்டாக அறிமுகமான மாடல் வரை கிடைக்கும் என்பதுதான் இந்த ஷோரூமின் சிறப்பு.

உலகின் மிகப்பெரிய சாம்சங் உற்பத்தி மையமும் இந்தியாவில் தான் இருக்கும் நிலையில் தற்போது ஷோரூமும், இந்தியாவில் உள்ளது இந்தியாவுக்கு சாம்சங் நிறுவனம் கொடுத்து வரும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.