உலகக்கோப்பை ஆட்டத்தின் அட்டவணை அறிவிப்பு.! ரசிகர்கள் மகிழ்ச்சியில்

0
94

world cup-2019 : உலகக்கோப்பை ஆட்டத்தின் அட்டவணை அறிவிப்பு.!

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தின் அட்டவணை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி மே 25ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக 28ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிராகவும் மொத்தம் இரண்டு பயிற்சி போட்டியில் மோதுகிறது.

cricket-world-cup2019
cricket-world-cup2019

இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஜூன் 5-ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்தியஅணி.உலகக்கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும்தான் முதல்போட்டியில் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்படும். இந்த முறை தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் வகையில் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. மே 30-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டி, ஜூலை 14-ம் தேதி வரை நடக்கிறது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியைச் சந்திக்கிறது. இதற்கு முன் ஜூன் 2-ம் தேதி தென் ஆப்பிரிக்க, இந்திய அணிகள் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) கடும் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டது.

ஏனென்றால் 2019ம் ஆண்டு ஐபில் போட்டி முடிவதற்கும் அடுத்த தொடர் தொடங்குவதற்கும் இடையே வீரர்களுக்கு 15 நாட்கள் இடைவெளி தேவை என லோதா கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

அந்த வகையில், 2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி மார்ச் 29-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடக்கிறது. அதன்பின் இந்திய அணிக்கு 15 நாட்கள் இடைவெளி வேண்டும் என்பதால், ஜூன் 2-ம் தேதி உலகக்கோப்பை போட்டி ஆட்டம் இருந்தால் அது சரியாக வராது என பிசிசிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இதனால், போட்டி ஜூன் 5-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பிசிசிஐ உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் முதல் ஆட்டம், ஜூன் 5-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்திய அணி. வழக்கமாக இந்தியாவுடனான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி மோதும் வகையில்தான் அட்டவணை அமைக்கப்பட்டு இருக்கும். இந்த முறை மாற்றப்பட்டுவிட்டது.

ஆனால், இந்த முறை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 2-வதாக நடக்கிறது. கடந்த 1992-ம் ஆண்டு நடந்ததைப் போன்று ரவுண்ட் ராபின் முறையில், அதாவது ஒவ்வொரு அணியும் அனைத்து அணியுடனும் ஒருமுறை மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. ஆதலால் இந்தியா பாகிஸ்தான் 2-வதாக மோதுகின்றன.

2019 -world-cup

கடந்த 2015ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டம் அடிலெய்டில் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்துடன் தொடங்கியது. 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியும் பர்மிங்ஹாம் நகரில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துடன் தொடங்கியது.

அந்த வகையில் முதல்முறையாக இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் முதல்முறையாகத் தொடங்காமல் உலகக்கோப்பை போட்டி தொடங்குகிறது. இதற்கு காரணம் ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடப்பதாகும்.இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 16-ம் தேதி, மான்செஸ்டர் நகரில் நடக்கிறது.வ