சுத்தியல் படக் நேசமணி லொடக்.! நேசமணி ட்ரெண்ட் ஆனாது எப்படி

0
62

nesamani : டிவிட்டரில் இந்திய அளவில் முதலிடத்திலும், உலக அளவில் 7வது இடத்திலும் நேற்று டிரெண்டிங் ஆன ப்ரே ஃபர் நேசமணி என்கிற ஹேஷ்டேக் எங்கு தொடங்கியது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்…

நேற்று திடீரென முகநூல் மற்றும் டிவிட்டரில் ‘Pray_For_Nesamani’ என்கிற ஹேஷ்டேக் வைரலாக பரவியது. பல லட்சம் பேர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவுகள் கூட இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தது. மேலும், உலக அளவில் 7வது இடத்திற்கு முன்னேறியது.

இந்நிலையில், இதை யார் தொடங்கியது என்கிற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. Civil Engineering Learners என்கிற முகநூல் பக்கத்தில் கடந்த 27ம் தேதி சுத்தியல் படத்தை வெளியிட்டு உங்கள் நாட்டில் இதன் பெயர் என்ன? என ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

nesamani
nesamani

இதைக்கண்ட விக்னேஷ் பிரபாகர் என்கிற தமிழ் வாலிபர் இதை சுத்தியல் என அழைப்போம். இது எதன் மீது அடித்தால் டங் டங் என சத்தம் வரும். பெயிண்டிங் காண்டிராக்டர் நேசமணியின் தலையை இந்த சுத்திதான் உடைந்தது. அவர் பாவம்” என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து யார் காண்டிராக்டர் நேசமணி என பலரும் கேட்க, அது பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஏற்ற கதாபாத்திரம் என அவர் விளக்கம் கொடுக்க இந்த ஹேஷ்டேக் வைரலானது. இவர் தொடங்கிய ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தது. இன்றும் டிவிட்டரில் #Nesamani ஹேஷ்டேக் முதலிடத்திலும் #Vadivelu ஹேஷ்டேக் 3ம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

nesamani
nesamani

விக்னேஷ் பிரபாகர் சவுதியில் பணிபுரிந்து வருகிறார். நான் போட்ட இந்த கமெண்ட் இப்படி ரீச் ஆகும் என நான் எதிர்பார்க்கவே இல்லை என விக்னேஷ் பிரபாகர் வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.