சினிமா பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவம்.! குழந்தையின் பரிதாப நிலை

0
56

operation : கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கராஜ் – நித்யா தம்பதிகள். ரங்கராஜின் மனைவி நித்யா நிறைமாத கர்பமாக இருந்துள்ளார். அவருக்கு பிரசவ நேரம் நெருங்கியதை அடுத்து அங்குள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் தன் மனைவியை சேர்த்திருக்கிறார் ரங்கராஜ்.

திடீரென நித்யாவுக்கு பிரசவ வலி வந்துள்ளது. அந்த நேரத்தில் மருத்துவமனையில் அனுபவமுள்ள மருத்துவர்கள் யாரும் இல்லாததால் பயிற்சி மருத்துவர்களே பிரசவம் பார்த்துள்ளனர் நித்தியாவிற்கு.

தங்கள் மூத்த மருத்துவர்களோடு வாட்ஸ் ஆப்பில் வீடியோ கால் மூலம் பேசி இந்த பிரசவத்தைப் பார்த்து குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். இதன் விபரீதம் ஆனால் பிறந்த குழந்தையின் உடல்நிலை இப்போது மோசமாக உள்ளது.

இதற்கு மருத்துவர்களின் அலட்சியப் போக்கேக் காரணம் எனக் கூறி ரங்கராஜ் – நித்யா தம்பதியினரின் உறவினர்கள் பலர் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் போலீஸார் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.