திருடனை புத்திசாலியாக ரூம்மில் அடைக்கும் நாய்.! வாட்ச்மேன் சில நிமிடகாட்சி

0
80

Watchman  – ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் படத்தின் அடுத்த புரமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடித்த திரில்லர் திரைப்படமாக வாட்ச்மேன் உருவாகியுள்ளது. ஒரு வீட்டினுள் நடிகர் சுமன் மற்றும் ஜு.வி.பிரகாஷ் ஆகியோர் மாட்டிக்கொள்ள அங்கு வரும் கும்பலுடன் எழும் மோதலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அப்படத்தின் சில நொடி காட்சிகள் அடங்கிய ஸ்னீக் பீக் வீடியோக்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் முதல் வீடியோ வெளியான நிலையில், தற்போது அடுத்த புரமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், இப்படத்தில் நடித்துள்ள ஒரு நாய் கொள்ளையனடமிருந்து திறமையாக தப்பித்து, லாவகமாக அவனை ஒரு அறையில் அடைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.