விஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன்.! தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.!

0
140

விஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன்.! தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.!

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் அனைத்து பாடல்களும் டி.இமான் இசையில் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த ஆல்பத்திற்காக தான் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

viswasam-thukudurai
viswasam-thukudurai

இந்நிலையில் இப்படத்திற்கு நான் பாடல்களை எழுதியிருந்தால் இதை தான் எழுதியிருப்பேன் என்று விஜய் ஆண்டனியின் நான் படத்தில் தப்பெல்லாம் தப்பே இல்லை என்ற பாடலை எழுதிய கவிஞர் அஸ்மின் ஒரு பாடலுக்குரிய வரிகளை வெளியிட்டுள்ளார்.

அஜித்திற்கு ஏற்ற அவர் வெளியிட்ட தெறிக்கவிடும் வரிகள் இதோ…

தூக்குத்தொற பேரக்கேட்ட, வாயப்பொத்தும் நெருப்பு, தூக்கிவச்சி கொஞ்ச சொல்லும், எங்க தல சிரிப்பு, வேட்டிகட்டி அவர் நடந்தா,  வேட்டிக்கெல்லாம் மதிப்பு – நான், பாட்டில் வச்சி பாடப்போறன், பாண்டியரின் சிறப்பு, சரணம்-1, பட்டாக்கத்தி பளபளக்க, பட்டிதொட்டி பரபரக்க, எட்டுவச்சு வச்சு வர்ரார் பாரு, எதிரி ஆகப்போறான் சுக்கு நூறு.,, கெட்டதெல்லாம் கருவறுக்க, தொட்டதெல்லாம் தூள்பறக்க.., முட்டி முட்டி மொளச்சாரு, தல வாழ்ந்து வரும் வரலாறு, சோழமன்னன் வந்து, மதுரயில பொறந்தான், சோகம் ஓடிருச்சு, எமக்கிவன் வரந்தான், ஏழமக்களுக்கு, அள்ளி அள்ளி கொடுத்தான், எம்ஜிஆரு போல, பேரு இவன் எடுப்பான், தன்னாலே வந்து இவன் தலையெடுத்தான், ஒரு கண்ணாலே எதிரிகளின், கத முடிப்பான்-வானம், அண்ணாந்து பார்க்கும் இவன், பூ மொகத்த.., பூமி கொண்டாடித்தீர்க்கும், இவன் தைரியத்த.பலபேர் இருந்தாலும், தல கொஞ்சம் வித்தியாசம், அதனால் எல்லோரும், இவன் மேலே விஸ்வாசம், ஒருநாள் தமிழ்நாடு, இவன் பின்னே உருவாகும், தலயின் பெயர் சொல்லி, வெளிநாடும் கொண்டாடும். தலை மகன் பிறந்தான், தமிழ் வழி நடந்தான், எங்கள் உயிரிலும் மனதிலும், அவன் அமர்ந்தான்..