விஸ்வாசம் படத்தை பார்த்து விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட.! erangi adichuthookify

0
110

விஸ்வாசம் படத்தை பார்த்து விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட.!

பொங்கல் விருந்தாக இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக தல அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் “விஸ்வாசம்”. கிராமத்து கதைக்களத்தில் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

viswasam
viswasam

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு டி இமான் இசையமைக்க நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமைய்யா, விவேக், கோவை சரளா ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். விஸ்வாசம் படத்திற்கு போட்டியாக ரஜினியின் பேட்ட படமும் திரைக்கு வந்தது.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இப்படத்தை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன், எமோஷனலான கதையம்சம் கொண்ட இப்படத்தை தந்த இயக்குனர் சிவாவை பாராட்டியுள்ளார். ஒளிப்பதிவாளர் வெற்றி மற்றும் இசையமைப்பாளர் இமான் படத்திற்கு துணையாக இருந்ததாக கூறியுள்ளார். நடிகை நயன்தாராவின் ரோல் சிறப்பாக அமைந்தது என்றும் கூறியுள்ளார்.