விஸ்வாசம் படத்தை பார்த்து அழுத குழந்தை.! தேம்பி தேம்பி அழுத தந்தை வைரலாகும் வீடியோ.!

0
155

விஸ்வாசம் படத்தை பார்த்து அழுத குழந்தை.!

அஜித் சிவா கூட்டணையில் நான்காவது படம். இளமை தோற்றம், ஓல்ட் கெட் அப் என தூக்குதுறையின் இருவேறு பரிணாமங்கள் படத்தில். சித் ஸ்ரீராம் குரலில் “கண்ணான கண்ணே” பாடல் படத்தின் ரிலீசுக்கு முன்பே வைரல் ஹிட். படத்திலும் இப்பாடல் இடம்பெறும் இடங்கள் பல ரசிகர்களை மெய் சிலிர்க்க செய்தது.

ajith viswasam
ajith viswasam

அஜித் மற்றும் அவரது மகளின் எமோஷனல் பகுதிகள் நண்டு சிண்டு முதல் பெரியவர்களை வரை பலரை பெரிதாக கவர்ந்தது. தமிழர் பண்டிகை சமயத்தில், குடும்ப உறவுகளை மையப்படுத்திய இப்படம் பி மற்றும் சி சென்டர் ரசிகர்களுக்காவே செதுக்கப்பட்ட படம் என்றால் அது மிகையாகாது.

தனது ஆசை, தன்னால் இயலாததை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது, அவர்களின் போக்கில் சுதந்திரமாக விட வேண்டும் என்ற மெஸேஜ் அசத்தல். கமெர்ஷியல் படம் என்று பார்த்துக்கொண்டிருந்த பலர் இந்த செண்டிமெண்ட் சமாச்சாரம் எதிர்பாராத சமயத்தில் புரட்டி விட்டது.

இந்த சில விடியோக்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.