அஜித் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘விஸ்வாசம்’ பாடல்கள்

0
67

அஜித் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘விஸ்வாசம்’ பாடல்கள்

‘வீரம், வேதாளம்’ படங்களின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் காம்போவில் கடந்த ஆண்டு (2017) வெளியான படம் ‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் 58-வது படத்தையும் சிவாவே இயக்கி வருகிறார். ‘விஸ்வாசம்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

ajith viswasam

இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், யோகி பாபு, தம்பி இராமையா, ரோபோ ஷங்கர், விவேக், கோவை சரளா, ரவி அவானா, முக்தர் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட சிங்கிள் டிராக் மற்றும் நேற்று ரிலீஸான ‘வேட்டிகட்டு’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல்கள் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.