நடுவரின் தீர்ப்புக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆண்டர்சனுக்கு அபராதம் விதித்த ஐசிசி

0
93

நடுவரின் தீர்ப்புக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆண்டர்சனுக்கு அபராதம் விதித்த ஐசிசி | Virat Kohli James Anderson Got Fined for His Behaviour During Oval Test

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

JamesAnderson-ViratKohli
Virat Kohli James Anderson Got Fined for His Behaviour During Oval Test

இந்தியா -இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் தொடரின், முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்தது. நேற்றைய இந்த ஆட்டத்தில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆன்டர்சன் தனது 29வது ஓவரில், விராட்கோலிக்கு எதிராக எல்.பி.டபிள்யு கேட்டு நடுவரிடம் முறையிட்டார். அதற்கு நடுவர் தர்மசேனா, அவுட் தரவில்லை.

இதையடுத்து, தனது ஓவரை முடித்துவிட்டு, நடுவரிடம் தொப்பியை வாங்கிக்கொண்டு செல்லும்போது, விராட்கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார் ஆன்டர்சன். அதுமட்டுமின்றி, இதை தடுக்க முயன்ற நடுவர் தர்மசேனாவிடம் ஆக்ரோஷத்துடன் கத்திவிட்டு சென்றார் ஆன்டர்சன். இந்த விவகாரத்தை, நடுவர் தர்மசேனா, மேட்ச் ரெஃப்ரி ஆன்டி பைகிராப்டியிடம் எடுத்துச் சென்றார். இந்தப் புகாரில் உண்மை குறித்து ஐசிசி எலைட் பேனல் விசாரணை செய்ததில், அதில் உண்மை இருப்பது தெரியவந்தது. அதேசமயம், தான் செய்த குற்றத்தையும் ஆண்டர்சன் ஒப்புக்கொண்டார். இதன்காரணமாக, ஐசிசி ஒழுக்கவிதிமுறையை மீறியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மைனஸ் புள்ளியுடன் போட்டிக்கான ஊதியத்தில் 15 சதவிகிதம் அபராதமும் ஆண்டர்சனுக்கு விதிக்கப்பட்டது.